மகளின் புகைப்படத்தை வெளியிடாததற்கு நன்றி - அனுஷ்கா சர்மா!
அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர், எதிர்காலத்தில் குழந்தையின் தனியுரிமையைக் கோரும் அதே வேளையில், மகள் வாமிகாவின் புகைப்படங்களைப் பயன்படுத்தாததற்காக ஊடகங்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக இந்தியாவின் ஹாட் டாபிக் விராட் கோலி தான். ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட்கோலி நீக்கப்பட்ட விதம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணியில் விராட் கோலி விலக்கு கேட்டுள்ளார் என்ற தகவல் பரவிய நிலையில், ஒருநாள் தொடரில் ஆடுவதை உறுதி செய்த விராட் கோலி, தன்னை தேர்வாளர்கள் கேப்டன்சியிலிருந்து நீக்கிய விதம், கங்குலியின் கருத்துக்கு முரணான கருத்து ஆகியவற்றை செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்க, கோலி பற்றவைத்த தீ பற்றி எரிகிறது.
Trending
இவ்வளவு பரபரப்புக்கு இடையே, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 16ஆம் தேதி மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டுச்சென்றது.
அப்போது, பேருந்தில் சென்று விமான நிலையத்தில் இறங்கியதும், விராட் கோலி செய்தியாளர்களிடம் தனது மகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கு பின்னர், அனுஷ்கா ஷர்மா மகள் வாமிகாவுடன் வந்தார். கோலியின் கோரிக்கையை ஏற்று, அவரது மகளை கேமராமேன்கள் புகைப்படம் எடுக்கவில்லை.
இந்நிலையில் தனது மகளை புகைப்படம் எடுக்காமல் இருந்த செய்தியாளர்களுக்கு அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் எங்கள் குழந்தைக்கு தனியுரிமையைத் தேடுகிறோம், மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி அவளது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வாய்ப்பளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம்.
அவள் வயதாகிவிட்டதால், அவளது இயக்கத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது, எனவே உங்கள் ஆதரவு தேவை, எனவே தயவுசெய்து இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். படங்களை இடுகையிடாமல் விட்டுவிட்டதற்காக ரசிகர்களுக்கும், இணைய மக்களுக்கும் நன்றி. இது உங்களின் அன்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது”என பதிவிட்டுள்ளார்.
தற்போது அனுஷ்கா சர்மாவின் இப்பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now