Advertisement

ஐபிஎல் 2022: அர்ஷ்தீப் சிங்கை புகழ்ந்த மயங்க் அகர்வால்!

அர்ஷ்தீப்சிங் தொடர்ந்து வியக்கத்தக்க வகையில் பந்துவீசி வருகிறார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் புகழ்ந்துள்ளார்.

Advertisement
Arshdeep Is The New Death Bowling Specialist For PBKS, Hails Skipper Mayank Agarwal
Arshdeep Is The New Death Bowling Specialist For PBKS, Hails Skipper Mayank Agarwal (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 26, 2022 • 09:58 AM

ஐபிஎல் 15ஆவது சீசனின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 26, 2022 • 09:58 AM

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 88 ரன்களைச் சேர்த்தார்.

Trending

இலக்கை துரத்திக் களமிறங்கிய சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது. 

இப்போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பேசிய பஞ்சாப் அணிக் கேப்டன் மயங்க் அகர்வால், “தொடர்ந்து டாஸை ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. அர்ஷ்தீப்சிங் தொடர்ந்து வியக்கத்தக்க வகையில் பந்துவீசி வருகிறார். கடினமான நேரங்களில் அவரை முழுமையாக நம்பி ஓவர்களை கொடுக்கலாம். 

என்னுடைய நம்பிக்கைக்குரிய பௌலர்கள் இவர்தான். ரபாடா சிறப்பாக பந்துவீசி ருதுராஜ், அம்பத்தி ராயுடு விக்கெட்களை வீழ்த்தியதுதான் வெற்றிக்கு உதவிக்கரமாக இருந்தது. அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்களது ஒரேகுறிகோள்” எனக் கூறினார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement