முதல் ஓவரிலேயே எதிரணியை மிரளவைத்த அர்ஷ்தீப் சிங்!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு டி காக்கும், டெம்பா பவுமாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியின் முதல் ஓவரை வீசிய தீபக் சஹார் அபாரமாக பந்துவீசி தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
இப்போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், தனது முதல் ஓவரிலேயே தென் ஆப்ரிக்கா வீரர்கள் பயத்தை காட்டியதோடு, அதிரடி ஆட்டக்காரரான டி காக்கின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே கைப்பற்றி அசத்தினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ரூசோவ் (0) மற்றும் டேவிட் மில்லர் (0) ஆகியோரை அர்ஸ்தீப் சிங் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி அசத்தினார். இதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி 9 ரன்களுக்கே 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
Just Amazing , Indian Bowling Attack Is Too Good ! #INDvsSA#DeepakChahar#ArshDeepSinghpic.twitter.com/PlN3g3fLwR
— Mufaddal Vohra (@ImRohanSharma45) September 28, 2022
சிறிது நேரம் தாக்குபிடித்த மார்கரம் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கொடுத்ததார். இருப்பினும் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதுவரை அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், ஹர்சல் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now