அவர் சிறந்த கேப்டனாக செயல்படுவார் - ஆர் அஸ்வின்!
இம்முறை சஞ்சு சாம்சன் நல்ல பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுவார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசன் வரும் 26ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த தொடரில் பலமான அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2008ஆம் ஆண்டு தான் ஐபிஎல் தொடரை முதல் முறையாக வென்றது. அதன் பின் 14 ஆண்டுகள் ஓடிவிட்டன.
Trending
இம்முறையாவது ஐபிஎல் கோப்பையை வென்று, தங்களது முதல் கேப்டனான வார்னேவுக்கு ராயல்ஸ் அஞ்சலி செலுத்துவார்களா என்ற ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இம்முறை சம பலத்துடன் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான அணியில் ஜாஸ் பட்லர், சிம்ரன் ஹேட்மைர், ஜெய்ஷ்வால், படிக்கல், வெண்டர் டுசன், ரியான் பராக் ஆகிய வீரர்களும்., அஸ்வின், சாஹல், போல்ட், பிரசித் கிருஷ்ணா , மெக்காய் உள்ளிட்ட பலமான வீரர்களும் உள்ளனர்.
ஒரு அணி எவ்வளவு பலமாக விளங்கினாலும், கேப்டன் சிறப்பாக செயல்பட்டால் தான் அந்த அணி வெல்ல முடியும். இதனால் இம்முறை சஞ்சு சாம்சனுக்கு பதில், ஜோஸ் பட்லரை கேப்டனாக மாற்ற வேண்டும் என்று பல விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதில் அளித்துள்ள அஸ்வின் இம்முறை சஞ்சு சாம்சன் நல்ல பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சஞ்சு சாம்சன் சீனியர்களிடம் அறிவுரை கேட்டு செயல்படுவார். எப்போதும் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு அளிப்பார். இது ஒரு கேப்டனுக்கான சிறந்த தகுதி ஆகும். மேலும் அவர் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால் அவருக்கு கூடுதல் சாதகம். மைதானத்தின் 360 டிகிரி பார்வையும் அவருக்கு கிடைக்கும். ஆடுகளம் எப்படி செயல்படுகிறது, வீரர் எப்படி விளையாடுகிறார் என்பதை சஞ்சு சாம்சனால் கணிக்க முடியும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீண்ட காலமாக சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளார். இதனால் இம்முறை அவர் சாதிப்பார். நிச்சயம் இந்த ஐபிஎல் அவருக்கு பிளாக்பஸ்டர் தான். என்னிடம் யாராவது பந்துவீச்சு குறித்தோ, கிரிக்கெட் குறித்தோ சந்தேகம் கேட்டால் நிச்சயம் அவர்களுக்காக உதவுவேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now