
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. லாபஸ்சேன் சதமடித்து 103 ரன்னிலும், வார்னர் 95 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 93 ரன்னிலும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 51 ரன்னிலும் அவுட்டாகினர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் மலான் 80 ரன்னிலும், ஜோ ரூட் 62 ரன்னிலும் அவுட்டாகினர். பென் ஸ்டோக்ஸ் 34 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 24 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், லயான் 3 விக்கெட்டும், கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து, 237 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. லாபஸ்சேன் 51 ரன்னும், டிராவிஸ் ஹெட் 51 ரன்னும், கேமரூன் கிரீன் 33 ரன்னும் எடுத்தனர்.