பாக்ஸிங் டே டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி பிளேயிங் லெவனை இன்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
இங்கிலாந்து அணி ஏற்கெனவே இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால், நிச்சயம் இப்போட்டியில் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதன்காரணமாக ரோரி பர்ன்ஸ், ஒல்லி போப், ஸ்டூவர் பிராட் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜானி பேர்ஸ்டோவ், ஸாக் கிரௌலி, ஜேக் லீச் ஆகியோர் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி: ஹசீப் ஹமீத், ஸாக் கிரௌலி, டேவிட் மாலன், ஜோ ரூட் (கே), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மார்க் வூட், ஒல்லி ராபின்சன், ஜாக் லீச்,ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Win Big, Make Your Cricket Tales Now