Advertisement

ஆஷஸ் தொடர்: இரண்டாவது டெஸ்டில் அண்டர்சன், பிராட் விளையாடுவது உறுதி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவரும் களமிறங்க தயாராக உள்ளதாக இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 13, 2021 • 13:12 PM
Ashes: Anderson, Broad 'fit and ready' for second Test
Ashes: Anderson, Broad 'fit and ready' for second Test (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் டிசம்பர் 8ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Trending


இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடாமல் இருந்த இங்கிலாந்தின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அடுத்த டெஸ்டில் நிச்சயம் விளையாடுவர் என அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“ஸ்டூவர்ட்டைப் போலவே ஜிம்மியும் உடற்தகுதியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு செல்ல தயாராக இருக்கிறார். நிச்சயமாக, அவர்களது அனுபவம் எங்களுக்கு உதவும். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று”  என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement