
Ashes: Bairstow left out of 12-member squad for 1st Test (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை முதல் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
நாளை (டிசம்பர் 8) ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது.
பிரிஸ்பேனில் தொடங்கும் முதல் டெஸ்டுக்கான ஆஸி. அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வீரர் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார் என்பது நாளை தெரிய வரும்.