
Ashes: Didn't think we will win 3rd Test this quickly, says Scott Boland (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 185 ரன்னிலும், ஆஸ்திரேலிய அணி 267 ரன்களிலும் ஆட்டமிழந்தது. அதன்பின் 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்காட் போலண்ட் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலிய வெற்றிக்கு உதவினார்.