Advertisement

SL vs AUS: காயம் காரணமாக டெஸ்டிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்!

ஆஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகர் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

Advertisement
Ashton Agar has been unable to recover from a side strain in time for the second Test beginning in G
Ashton Agar has been unable to recover from a side strain in time for the second Test beginning in G (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 02, 2022 • 09:38 PM

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 5 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 02, 2022 • 09:38 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Trending

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலேவில் ஜூலை 8ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து சுழற்பந்துவீச்சாளர் ஆஸ்டர் அகர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆஸ்டன் அகர் பதிலாக சுழல்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் ஆடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அகர்க்கு பதிலாக 17 பேர் கொண்ட அணியில் ஜான் ஹோலண்டை தேர்வு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement