
Ashwin break Kapil Dev's tally of 434 Test wickets (Image Source: Google)
மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று, சரித் அசலங்காவின் விக்கெட்டை அஸ்வின் சாய்த்தார். இதன் மூலம் டெஸ்டில் தனது 435ஆவது விக்கெட்டை அவர் கைப்பற்றி உள்ளார்.
இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார். தமது 85 டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் 30 முறை 5 விக்கெட்களையும், 7 முறை 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.