
Ashwin gifts Ajaz Patel his Test jersey autographed by teammates (Image Source: Google)
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து சுழற்பந்து வீரர் அஜாஸ் படேல் கைப்பற்றியிருந்தார்.
மேலும், 2ஆவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விஜய் பாட்டீல் பாராட்டு தெரிவித்தார்.