Advertisement

நாதன் லையன் அழைப்பை ஏற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் பதிவு!

சிட்னி உங்களுடைய தேர்வு. சென்னையில் மேற்கு மாம்பலம் என்னுடைய தேர்வு என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையனிற்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 14, 2023 • 13:58 PM
நாதன் லையன் அழைப்பை ஏற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் பதிவு!
நாதன் லையன் அழைப்பை ஏற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் பதிவு! (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் 1995க்குப்பின் கடந்த 28 வருடங்களாக சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோற்காமல் இருந்து வருகிறது. அந்த நிலையில் இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் நேதன் லையன் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி பாராட்டி பேசியிருந்தார்.

Trending


குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த பவுலராக உருவெடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை ஆரம்பத்திலிருந்தே உன்னிப்பாக கவனித்து வருவதாக நேதன் லையன் தெரிவித்தார். அதை விட தம்மை அறியாமலேயே அஸ்வினை பார்த்து நிறையவற்றை கற்று வருவதால் அவர் தம்முடைய பயிற்சியாளர்களில் ஒருவராக இருப்பதாகவும் நேதன் லையன் வெளிப்படையாக கூறியிருந்தார்.

மேலும் “ஓய்வுக்கு பின் ஒன்றாக அமர்ந்து பேசக்கூடிய இடத்தை தேர்வு செய்வதில் எங்களுக்கிடையே வலுவான போட்டி இருக்கும் என்பதை உறுதியாக சொல்வேன். அதற்கு முன்பாக எங்களுக்கு கிரிக்கெட்டில் இன்னும் சில நல்ல வருடங்கள் இருக்கிறது” என்று அஸ்வினை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.