Advertisement

சிறந்த டெஸ்ட் வீரர் 2023: அஸ்வின், ஹெட், காவாஜா & ரூட்டின் பெயர் பரிந்துரை!

2023ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான ஐசிசி விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், டிராவிஸ் ஹெட், ஜோ ரூட், உஸ்மான் கவாஜா ஆகியோரது பெயர் பரிந்துரைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 05, 2024 • 22:14 PM
சிறந்த டெஸ்ட் வீரர் 2023: அஸ்வின், ஹெட், காவாஜா & ரூட்டின் பெயர் பரிந்துரை!
சிறந்த டெஸ்ட் வீரர் 2023: அஸ்வின், ஹெட், காவாஜா & ரூட்டின் பெயர் பரிந்துரை! (Image Source: Google)
Advertisement

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள், சிறந்த ஒருநாள் அணி, டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில், ரவிச்சந்திரன் அஸ்பின், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2016 இல் வெற்றி பெற்று 2021 இல் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது 3ஆவது முறையாக 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பாதையில் அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending


 இதேபோன்று இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெல்ல காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement