
Ashwin on retiring out: 'We're late, but this will happen a lot' (Image Source: Google)
ஐபிஎல் போட்டியிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக ரிடையர்ட் அவுட் முறையில் ஆட்டத்திலிருந்து விலகி புதிய புரட்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய லக்னெள அணி, 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஒரு விநோதமான சம்பவம் ஏற்பட்டது. ராஜஸ்தான் இன்னிங்ஸின்போது 6ஆம் நிலை வீரராக 10ஆவது ஓவரின் கடைசியில் களமிறங்கினார் அஸ்வின். ரியான் பராக் இருக்கும்போது அஸ்வின் அவருக்கு முன்பு களமிறங்கியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.