
ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கனுடன் டெல்லி வீரர் அஸ்வின் மோதியது சர்ச்சையாக வெடித்தது. இந்த போட்டியில் டெல்லி அணி பேட்டிங் செய்த போது வெங்கடேஷ் வீசிய 19ஆவது ஓவரில், பந்த் ஒரு ரன் அடித்துவிட்டு ஓடினார்.
அதன்பின் திரிபாதி பந்தை தடுத்து அதை தூக்கி வீசிய போது, பந்து பந்த் உடலில் பட்டு எதிர் திசையில் சென்றது. இதை பயன்படுத்தி அஸ்வின் இரண்டாவது ரன் ஓட கூப்பிட்டார். பந்தும் அஸ்வின் சொன்னதை கேட்டு இரண்டாவது ரன் ஓடினார். இதன் காரணமாக அஸ்வினுடன் இயான் மோர்கன் சண்டைக்கு சென்றார்.
உடலில் பட்டு ரன் ஓடுவது கிரிக்கெட் வரையறைக்கு எதிரானது. இப்படி எல்லாம் செய்ய கூடாது என்று மோர்கன் அஸ்வினிடம் சண்டைக்கு சென்றார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அஸ்வினும் இயான் மோர்கனிடம் கோபமாக பதில் அளித்தார். அஸ்வின் இப்படி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதை ஷேன் வார்னே உள்ளிட்ட பல வீரர்கள் விமர்சனம் செய்து இருந்தனர். சர்வதேச ஊடகங்களும் அஸ்வினை விமர்சனம் செய்து இருந்தன.