Advertisement
Advertisement
Advertisement

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் அஸ்வின், ஜடேஜா!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வினும், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 31, 2024 • 21:38 PM
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் அஸ்வின், ஜடேஜா!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் அஸ்வின், ஜடேஜா! (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளை இன்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 7ஆம் இடத்திற்கு, இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய ஒல்லி போப் 20 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார். 

Trending


இப்பட்டியளின் டாப் 10 இல் இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே 10ஆம் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 12ஆம் இடத்தையும், ரிஷப் பந்த் 13ஆம் இடத்திலும் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 

இப்பட்டியளில் தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, இந்திய அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா 3ஆம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசில்வுட் 4ஆம் இடத்தையும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்தையும் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement