
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணி தொடங்கியுள்ளது.ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி அனைத்து அணிகளின் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஷ் ஜோர்டன், பகத் வர்மா, கேஎம் ஆசிஃப், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.
சிஎஸ்கே தக்கவைப்பு: எம்எஸ் தோனி (கேப்டன்), டிவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, தீபக் சௌத்ரினா, சிமிர்ஜித் சிங், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா ஆகியோரை சிஎஸ்கே தக்கவைத்துள்ளது.