ஆசிய கோப்பை 2022: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நாளை மறுநாள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையே கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற மோதலில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தார். இதனால் இப்போட்டியில் அதற்கு இந்திய அணி பழித்தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
- இடம் - துபாய் சர்வதேச மைதானம், துபாய்
- நேரம் - இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் நீண்ட நாள்களுக்குப் பிறகு விராட் கோலி மீண்டும் களமிறங்கவுள்ளதால் அவரின் மீதான எதிர்பார்ப்பும் இத்தொடரில் அதிகரித்துள்ளது.
மேலும் சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா என அதிரடி வீரர்கள் வரிசைக்கட்டி நிற்படு அணியின் பேட்டிங் பலத்தை அதிகரித்துள்ளது. அதேசமயம் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேலும் இருப்பதும் அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.
அதேசமயம் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியையும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. முகமது ரிஸ்வான், ஆசிஃப் அலி, ஃபகர் ஸமான் ஆகியோர் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் ஹாரிஸ் ராவூஃப், உஸ்மான் காதிர், முகமது ஹொஸ்னைன் ஆகியோரும் இருப்பது அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இருப்பினும் இரு அணியைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ள இரு அணிகளுக்கும் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 9
- இந்தியா - 6
- பாகிஸ்தான் - 2
- முடிவில்லை - 1
உத்தேச அணி
இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல்/ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.
பாகிஸ்தான் - பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஸமான், ஆசிஃப் அலி, குஷ்தில் ஷா, இப்திகார் அகமது, ஷதாப் கான், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப், ஷாநவாஸ் தஹானி, முகமது ஹஸ்னைன்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ் - பாபர் ஆசம், சூர்யகுமார் யாதவ், ஃபகார் ஸமான்
- ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான்
- பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஹரிஸ் ரவுஃப்
Win Big, Make Your Cricket Tales Now