ஆசிய கோப்பை 2022, வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் இன்று வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இன்று வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆஃப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. பந்துவீச்சில் ஃபரூக்கி, கேப்டன் முகமது நபி, முஜீப் அர் ரஹ்மான் சிறப்பான ஆட்டத்தை தருகின்றனர். பேட்டிங்கில் ஹஸ்ரதுல்லா, ரஹ்மதுல்லா மின்னல் வேக ரன்குவிப்பை தருகின்றனர்.
Trending
இன்றும் இந்த அசத்தல் தொடர்ந்தால் தொடர்ந்து 2 வெற்றியுடன் ‘சூப்பர்–4’ சுற்றுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி நேரடியாக முன்னேறலாம்.
வங்கதேசத்தை பொறுத்தவரையில் சமீபத்தில் ஜிம்பாப்வே மண்ணில் ஒருநாள், டி–20 தொடரில் தோற்ற சோகத்தில் உள்ளது. அது தவிர கடந்த டி20 உலக கோப்பை தொடருக்குப் பின் பங்கேற்ற 13 டி20 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றியை ஈட்டியுள்ளது.
இம்முறை அனுபவ வீரர், கேப்டன் சாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் அணிக்கு திரும்பியுள்ளதால், எழுச்சி பெறும் என நம்பப்படுகிறது. எனினும் ஆப்கானிஸ்தானுடன் மோதிய 8 போட்டியில் 5இல் தோற்றதும், வங்கதேசத்திற்கு அச்சத்தை தரலாம்.
உத்தேச அணி
வங்கதேசம் - முகமது நைம், சபீர் ரஹ்மான், அனாமுல் ஹக், மஹ்முதுல்லா, ஷாகிப் அல் ஹசன் (கே), முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன், மொசாடெக் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, எபாடோட் ஹொசைன்.
ஆஃப்கானிஸ்தான் - நஜிபுல்லா சத்ரான், ஹஸ்ரத்துல்லா ஜசாய், இப்ராஹிம் சத்ரான், உஸ்மான் கானி, ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது நபி (கே), ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், நூர் அகமது, கரீம் ஜனத்.
Win Big, Make Your Cricket Tales Now