
Asia Cup, Super 4 Match 1: Sri Lanka vs Afghanistan – Cricket Match Prediction, Fantasy XI Tips & Pr (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சூப்பர் 4 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
லீக் சுற்றில் ஆஃப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்குகிறது. லீக் சுற்றில் அபாரமாக விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களம் காண்கிறது.