ஆசிய கோப்பை, சூப்பர் 4 : பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் போட்டி பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - துபாய் சர்வதேச மைதானம், துபாய்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றி சொதப்பினாலும், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை வீழ்த்தி அசத்தலான கம்பேக்கை கொடுத்தது. அதிலும் முகமது ரிஸ்வானின் ஆட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
அதேசமயம் முகமது ரிஸ்வான் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகமும் உள்ளது. மேலும் பந்துவீச்சில் அந்த அணி ஹசன் அலிக்கு இப்போட்டியிலாவது வாய்ப்பு வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மறுபக்கம் முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டாலும், இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் தோல்வியைத் தழுவியது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் அந்த அணியில் குர்பாஸ், ஸத்ரான், ஸஸாய் ஆகியோர் உச்சகட்ட ஃபார்மில் உள்ளனர். அதேசமயம் பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான், ஃபரூக்கி ஆகியோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 2
- பாகிஸ்தான் - 2
- ஆஃப்கானிஸ்தான் - 0
உத்தேச அணி
பாகிஸ்தான் – பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான் , ஃபகார் ஸமான், முகமது நவாஸ், குஷ்தில் ஷா, ஆசிப் அலி, இஃப்திகார் அகமது, ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்
ஆஃப்கானிஸ்தான் - ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி (கே), ரஷித் கான், கரீம் ஜனத், சமியுல்லா ஷின்வாரி, நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான், ரஹ்மானுல்லா குர்பாஸ்
- பேட்டர்ஸ் - இப்ராஹிம் ஸத்ரான், ஃபகார் ஸமான், குஷ்தில் ஷா
- ஆல்-ரவுண்டர்கள் - முகமது நவாஸ், ஷதாப் கான், முகமது நபி
- பந்துவீச்சாளர்கள் - முஜீப் உர் ரஹ்மான், நசீம் ஷா, ரஷித் கான்
Win Big, Make Your Cricket Tales Now