
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி ஆஷஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் நேற்று முந்தினம் தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச செய்ய தீர்மானித்தது.
இதை அடுத்து பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கட்டுக்கோப்புடன் பந்துவீசிய இங்கிலாந்து பவுலர்கள் அந்த அணியை 303 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதமடித்து 101 ரன்களும், கிறிஸ் க்ரீன் 74 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் சாய்த்தனர்.
இதையடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து மீண்டும் ஆஸ்திரேலியாவின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 188 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 36 ரன்கள் எடுத்தார், ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.