ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது.
Australia vs India 3rd Test Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதில் முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், இரண்டாவது போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுக்குமா என்ற ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Trending
AUS vs IND 3rd Test: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
- இடம் - காபா கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்
- நேரம் - டிசம்பர் 14, அதிகாலை 5.50 மணி (இந்திய நேரப்படி)
AUS vs IND 3rd Test: Pitch Report
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை 68 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 26 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 27 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 327 ரன்களாக உள்ள நிலையில், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 161 ரன்களாக மட்டுமே உள்ளது. மேலும் இங்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகளவு பவுன்ஸ் கிடைக்கும் என்பதால் நிச்சயம் பேட்டர்களுக்கு தடுமாற வாய்ப்புள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதாலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
AUS vs IND 3rd Test: Where to Watch?
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி பிளர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
AUS vs IND 3rd Test: Head To Head Record
- மோதிய போட்டிகள் - 109
- ஆஸ்திரேலியா - 46
- இந்தியா - 33
- முடிவில்லை - 29
Australia vs India 3rd Test Probable Playing XI
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்/ஜோஷ் ஹேசில்வுட்.
இந்திய அணியின் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ்தீப்/வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
AUS vs IND 3rd Test: Dream11 Team
- விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்டீவ் ஸ்மித், நாதன் மெக்ஸ்வீனி, டிராவிஸ் ஹெட்
- ஆல்-ரவுண்டர் - நிதீஷ் குமர் ரெட்டி, மிட்செல் மார்ஷ்
- பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் ஸ்டார்க் (துணைக்கேப்டன்), பாட் கம்மின்ஸ்
AUS vs IND 3rd Test Dream11 Prediction, AUS vs IND Dream11 Prediction, Today Match AUS vs IND, AUS vs IND Test Series, AUS vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs India
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now