Advertisement

AUS vs SL, 5th T20I: ஆஸியை 154 ரன்களில் கட்டுப்படுத்திய இலங்கை!

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 20, 2022 • 13:35 PM
AUS vs SL, 5th T20I: Sri Lanka restricted Australia by 154 runs
AUS vs SL, 5th T20I: Sri Lanka restricted Australia by 154 runs (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஃபிஞ்ச், பென் மெக்டர்மோட், ஜோஷ் இங்கிலிஷ், மேக்ஸ்வெல் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending


அதன்பின் களமிறங்கிய மேத்யூ வேட் அதிரடியாக விளையாடி 47 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது. 

இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement