
Aus vs SL: Jhye Richardson, Inglis and Maxwell star as hosts win fourth T20I, gain 4-0 series lead (Image Source: Google)
ஏற்கெனவே 3 டி20 ஆட்டங்களையும் வென்று தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, மெல்போர்னில் இன்று நடைபெற்ற 4ஆவது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் நிஷங்கா அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.
இந்த இலக்கைச் சுலபமாக விரட்டியது ஆஸ்திரேலிய அணி. 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 4ஆவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்றது.