AUS vs SL: வநிந்து ஹசரங்காவிற்கு கரோனா!
இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வநிந்து ஹசரங்காவிற்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.. இதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கான்பெர்ராவில் நடைபெறுகிறது. இதற்கிடையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் ஆவரால் இனி இத்தொடரில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
முன்னதாக மற்றொரு இலங்கை வீரரான குசால் மெண்டிஸ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதால், மூன்றாவது டி20 போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now