Advertisement

ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 01, 2024 • 18:05 PM
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்
  • நேரம் - காலை 9 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருக்கும் காரணத்தால் சுழற்பந்து வீச்சாளர்களும் போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும். இதனால் பேட்டர்கள் பொறுமையாக நின்று விலையாடினால் மட்டுமே பெரிய ஸ்கோரை குவிக்க முடியும். 

நேரலை 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் இப்போட்டியை கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 143
  • ஆஸ்திரேலியா - 76
  • வெஸ்ட் இண்டீஸ் -61
  • முடிவில்லை - 06

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கே), மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் லாபுஷாக்னே, ஆரோன் ஹார்டி, சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், லான்ஸ் மோரிஸ், ஆடம் ஸாம்பா.

வெஸ்ட் இண்டீஸ்: அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கே), க்ஜோர்ன் ஓட்டேலி, கேசி கார்டி, டெடி பிஷப், ஜஸ்டின் கிரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், மேத்யூ ஃபோர்டு, அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஷாய் ஹோப், ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்டர்ஸ்: ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட்
  • ஆல்ரவுண்டர்கள்: மேத்யூ ஷார்ட் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி (துணை கேப்டன்), ரொமாரியோ ஷெப்ஃபர்ட்
  • பந்துவீச்சாளர்கள்: சீன் அபோட், அல்சாரி ஜோசப்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement