Advertisement

ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 10, 2024 • 21:21 PM
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் நிலையில் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - அடிலெய்ட் ஓவல் மைதானம், அடிலெய்ட்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

அடிலெய்ட் ஓவல் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் நிச்சயம் பேட்டர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாலய இலக்கை நிர்ணயிக்கலாம். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலம்.

நேரலை 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் இப்போட்டியை கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • ஆஸ்திரேலியா - 10
  • வெஸ்ட் இண்டீஸ் - 10

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ் (கே), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், சீன் அபோட், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பவல் (கே), ஆண்ட்ரே ரஸல், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோஸப்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: நிக்கோலஸ் பூரன், ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்டர்ஸ்: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ரோவ்மேன் பவல், பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல் (துணை கேப்டன்), ஆண்ட்ரே ரஸல் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்: ஜோஷ் ஹசில்வுட், அல்சாரி ஜோஸப்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement