Advertisement

காணொளி: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்; குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய சின்க்ளேர் !

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் வெஸ்ட் இண்டீஸின் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 26, 2024 • 22:35 PM
காணொளி:  டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்; குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய சின்க்ளேர் !
காணொளி: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்; குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய சின்க்ளேர் ! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களைச் சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ஜோசுவா டா சில்வா 79 ரன்களையும், கெவின் சின்க்ளெர் 71 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 24 ரன்களுக்குகே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Trending


அதன்பின் களமிறங்கிய அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஊஸ்மான் கவாஜா ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதன்மூலம் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்த்து. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச் 4 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இரண்டாம்வது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 13 ரன் எடுத்திருந்தது. இதையடுத்து 35 ரன்கள் முன்னிலையுடன் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய கெவின் சின்க்ளேர், 75 ரன்களைச் சேர்த்து நங்கூரம் போல் விளையாடி வந்த உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

 

இது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவரது முதல் விக்கெட்டாகவும் அமைந்தந்து. இந்நிலையில் விக்கெட் எடுத்ததைக் கொண்டாடும் விதமாக அவர் மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்து விக்கெட் வீழ்த்திய கொண்டாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement