
Aus W v Ind W, 3rd T20I: Visitors fail to finish tour on high after suffering 14-run loss (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பெத் மூனி 61 ரன்களையும், தஹிலா மெக்ராத் 44 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் மந்தனா அரைசதம் கடந்தும் அசத்தினார்.