
Australia Announce Playing XI For 2nd Ashes Test, Make One Forced Change (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.
மேலும் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த ஜோஷ் ஹசில்வுட், டேவிட் வார்னர் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் வழுத்து வந்தது.
இந்நிலையில் இதற்கு விடையளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி தங்களது பிளேயிங் லெவனை இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஜோஷ் ஹசில்வுட்டிற்கு பதிலாக ஜெய் ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.