
Australia as both Josh Inglis and Ashton Agar have tested positive for Covid (Image Source: Google)
ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் மற்றும் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக விக்கெட் கீப்பர் ஜோஷ் விலகி உள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக உள்ளது.