Advertisement

ஆஷஸ் தொடர்: இங்கிலாந்தை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Advertisement
Australia Beat England By 9 Wickets In First Ashes Test
Australia Beat England By 9 Wickets In First Ashes Test (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 11, 2021 • 10:17 AM

ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் காபாவில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் ஆட்டமே இரு அணிகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 11, 2021 • 10:17 AM

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் கம்மின்ஸ் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 147 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸில் ட்ராவிஸ் ஹெட்டின் (152) சதம், வார்னர் (94), லாபுஷேன் (74) ஆகியோரின் ஆட்டத்தால் 425 ரன்களுக்கு ஆட்டமிழந்து 278 ரன்கள் முன்னிலை பெற்றது.

Trending

இதையடுத்து, 2ஆவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி விரைவாக முதல் இரு விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஜோ ரூட் (86) டேவிட் மலான் (80) ரன்களில் ஆட்டமிழக்காமல் போராடி வருகிறார். 58 ரன்கள் பின்தங்கிய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை முடித்தது. 

இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள்  ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டேவிட் மாலன் 82 ரன்களிலும், கேப்டன் ஜோ ரூட் 89 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற, இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது. 

இறுதியில் அந்த அணி 297 ரன்களில் ஆல் அவுட் ஆனாது. இருப்பினும் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிற்கு 20 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

அதனை சுலபமாக சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியை வென்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement