டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இறுதிப்போட்டியில் மோதும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதாலும், முதல் முறையாக டி20 உலக கோப்பையை தூக்கும் வேட்கையில் இருப்பதாலும் போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பெரிய மேட்ச் வின்னர்கள் என்று யாரும் இல்லையென்றாலும், தேவையான போது யாராவது ஒருசில வீரர்கள் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெறச்செய்கின்றனர். அந்த அணி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கின்றனர்.
அதிலும் இஷ் சோதி, டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், டெவான் கான்வே, வில்லியம்சன், மார்டின் கப்டில், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம் என ஒவ்வொரு வீரருமே அணிக்கு தேவையானபோது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்குகிறது.
ஆனால் காயம் காரணமாக டெவான் கான்வே இறுதிப்போட்டியில் விளையாடாதது ஒன்றே நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.