Advertisement

பிராடை ஆடவைக்காதது வியப்பாக இருந்தது - ஸ்டீவ் ஸ்மித்!

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை ஆடும் லெவனில் சேர்க்காதது ஆஸ்திரேலிய அணிக்கே வியப்பாக இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Advertisement
Australia surprised by Stuart Broad’s lack of Ashes action, says Steve Smith
Australia surprised by Stuart Broad’s lack of Ashes action, says Steve Smith (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 03, 2022 • 10:29 PM

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 03, 2022 • 10:29 PM

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Trending

நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமாக ஆடிவருகிறது. இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனே சரியில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி குறித்து பேசியுள்ள ஸ்டீவ் ஸ்மித், “ஸ்டூவர்ட் பிராடை பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆடவைக்காதது எங்களுக்கே வியப்பாகத்தான் இருந்தது. அந்த 2 ஆடுகளங்களுமே அவருக்கு பொருத்தமாக இருந்திருக்கும். அடிலெய்டில் பிராட் நன்றாக பந்துவீசினார். 

அவர் எப்போதுமே எனக்கு கடும் போட்டியாளராக இருந்திருக்கிறார். என்னை பலமுறை அவுட்டாக்கியும் இருக்கிறார். நானும் அவர் பவுலிங்கில் ஸ்கோர் செய்திருக்கிறேன். எனக்கும் பிராடுக்கும் இடையே நல்ல போட்டி இருந்திருக்கிறது. அவரை ஆடவைக்காதது எனக்கு வியப்புதான்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement