
Australia To Face India In The Final Of CWG After Defeating New Zealand In Semis (Image Source: Google)
பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியா உள்பட 8 அணிகள் இதில் ஆடுகின்றன. 5 முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பாா்படோஸ் அணிகளுடன் ஏ பிரிவில் இந்தியா விளையாடியது.
இத்தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறினர். அதன்படி நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போடியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.