Australia vs England, 2nd Ashes Test - போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நாளை அடிலெய்டில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 16) நடைபெறவுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
- இடம் - அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்
- நேரம் - காலை 9.30 (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வார்னர், ட்ராவிஸ் ஹெட், ஹசில்வுட், நாதன் லையன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.
இந்நிலையில் முதல் போட்டியில் காயமடைந்த ஹேசில்வுட்டுக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் ஆஸி. அணியில் இடம்பெறுவார் என கேப்டன் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.
ஆதன்படியே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் வார்னர், ஸ்மித், லபுசாக்னே, கம்மின்ஸ், லயன் ஆகியோர் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பகலிரவு டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிராட், ஆண்டர்சன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்கள். மார்க் வுட் இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய 11 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி கிடைத்ததில்லை. மேலும் ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 8 பகலிரவு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அடிலெய்டில் மட்டும் 5 வெற்றிகள். ஆனால் இங்கிலாந்து அணி பகலிரவு டெஸ்டுகளில் ஒரு வெற்றியை மட்டும் அடைந்து 3இல் தோல்வியடைந்துள்ளது.
எனினும் கடந்த வருடம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தோல்வியிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றது போல நாங்களும் வெற்றி பெற முயற்சி செய்வோம் என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
அடியெல்ட் ஆடுகளம், பகலிரவு டெஸ்ட், வரலாறு என பல அம்சங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக உள்ளன. 1954-55க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டை இழந்து டெஸ்ட் தொடரை வென்ற அணி எனப் பெயரெடுக்க இங்கிலாந்து விரும்புகிறது. இதனால் இப்போட்டியின் மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 352
- ஆஸ்திரேலியா வெற்றி - 147
- இங்கிலாந்து வெற்றி - 110
- முடிவில்லை - 95
உத்தேச அணி
ஆஸ்திரேலிய அணி: மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி , பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜெய் ரிச்சர்ட்சன்.
இங்கிலாந்து அணி: ரூட் (கேப்டன்), பர்ன்ஸ், ஹமீது, மலான், ஸ்டோக்ஸ், போப், பட்லர் (விக்கெட் கீப்பர்), வோக்ஸ், ராபின்சன், லீச், பிராட், ஆண்டர்சன்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ஜே பட்லர், ஏ கேரி
- பேட்டர்ஸ் - ஜே ரூட், ஹாசீப் ஹமீத், ஸ்டீவ் ஸ்மித்
- ஆல்-ரவுண்டர்கள் - மார்னஸ் லாபுசாக்னே, கிறிஸ் வோக்ஸ்
- பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேய் ரிச்சர்ட்சன்
Win Big, Make Your Cricket Tales Now