AUS vs ENG, 5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை ஹாபர்ட்டில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ஹாபர்ட்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
- இடம் - ஓவல், ஹாபர்ட்
- நேரம் - காலை 8 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கெனவே வென்றுள்ளது. இருப்பினும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் கைப்பற்ற முன்னைப்பில் உள்ளது.
அதேசமயம் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து, அடுத்தடுத்த இன்னிங்ஸில் சதமடித்த உஸ்மான் கவாஜா, நாளைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்குவது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
அவருடன் வார்னர், லபுசாக்னே, ட்ராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் இருப்பதால் பேட்டிங் பலம் அதிகரித்துள்ளது. பந்துவீச்சில் கம்மின்ஸ், ஸ்டார்க், போலண்ட் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டுவருவது இங்கிலாந்து அணிக்கு பெரும் சிக்கலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்விகளைச் சந்தித்து வருகிறது. அதிலும் ஆஷஸ் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அணி தோல்வியடைந்தது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும் காயம் காரணமாக ஜோஸ் பட்லர் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கும் காயம் காரணமாக நாளைய போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் சாம் பில்லிங்ஸ், ஒல்லி போப், கிறிஸ் வோக்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் நாளைய போட்டியில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவிவருகிறது.
ஏற்கெனவே இத்தொடரை இழந்துள்ள இங்கிலாந்து அணி, கடைசி டெஸ்டிலாவது ஆறுதல் வெற்றியைப் பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 355
- ஆஸ்திரேலிய வெற்றி - 149
- இங்கிலாந்து வெற்றி - 110
- முடிவில்லை - 96
உத்தேச அணி
ஆஸ்திரேலியா - உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்/ ஜே ரிச்சர்ட்சன்
இங்கிலாந்து - ஹசீப் ஹமீத்/ ரோரி பர்ன்ஸ், ஜாக் கிரௌலி, டேவிட் மாலன், ஜோ ரூட் (கே), பென் ஸ்டோக்ஸ்/ கிறிஸ் வோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ்/ ஒல்லி போப், சாம் பில்லிங்ஸ், மார்க் வூட், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - அலெக்ஸ் கேரி
- பேட்டர்ஸ் - ஜாக் கிரௌலி, ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷாக்னே
- ஆல்-ரவுண்டர் - ஜோ ரூட்
- பந்துவீச்சாளர்கள் - மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், பாட் கம்மின்ஸ், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க்.
Win Big, Make Your Cricket Tales Now