
Australia vs Sri Lanka, T20 World Cup - Probable XI (Image Source: Google)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ‘சூப்பர்-12’ சுற்று லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இலங்கை அணி முதல் சுற்றில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றதுடன், ‘சூப்பர்-12’ சுற்றில் முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது. இலங்கை அணியின் பேட்டிங்கில் அசலங்கா, பனுகா ராஜபக்சே, குசல் பெரேரா, பதும் நிசங்கா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் லஹிரு குமரா, சமிகா கருணாரத்னே, சுழற்பந்து வீச்சில் வனிந்து ஹசரங்கா நம்பிக்கை அளிக்கிறார்கள். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா அணிக்கு திரும்புவது கூடுதல் பலம் சேர்க்கும்.