
Australia Women restrict India Women by 118/9 (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றினர்.