ஆஸ்திரேலியா முன்னாள் விக்கெட் கீப்பர் ராட்மார்ஷ் காலமானார்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான ராட்மார்ஷ் இன்று காலமானார்.

Australian Cricket Great Rod Marsh Passes Away After Being In Induced Coma (Image Source: Google)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரரும், முன்னாள் விக்கெட் கீப்பருமானவர் ராட்மார்ஷ். இந்நிலையில் ராட் மார்ஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74 ஆகும்.
கடந்த வாரம் மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Trending
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ராட் மார்ஷ் ஒருவராவார். 1970 முதல் 1984 வரை 96 டெஸ்டில் விளையாடி உள்ளார். 355 விக்கெட்டுகள் விழுவதற்கு (கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்) இவர் காரணமாக இருந்தார். 74 வயதான அவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருந்தார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News