Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்!

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 30, 2023 • 11:22 AM
சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்! (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி ஸ்டார்க், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 263 போட்டியில் விளையாடி 651 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்தார்.

சர்வதேச போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு 28 ரன் கொடுத்து 6 விக்கெட் சாய்த்ததாகும். 23 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 10 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இதன்மூலம் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது ஆஸ்திரெலிய வீரர் எனும் பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார். இந்த பட்டியளில் ஷேன் வார்னே 1001 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.

Trending


இதுவரை 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகளையும், 121 ஒருநாள் போட்டிய்ல் 236 விக்கெட்டுகளையும், 58 டி20 போட்டிகளில் 73 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 14 முறை ஐந்து விக்கெட், இரண்டு முறை 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்ட்ல் 9 முறையும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement