
AUSW vs INDW: Beth Mooney's fifty helps Australia women post total on 149 (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனை அலீசா ஹீலி 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மெக் லெனிங், கார்ட்னர், எல்லீஸ் பெர்ரி என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் பொறுப்பை உணர்ந்து விளையாடிய பெத் மூனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். பின் 61 ரன்கள் எடுத்திருந்த மூனி, கெய்க்வாட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.