
Axar Patel Out Of Indian Squad For T20 World Cup, This Player Gets A Chance (Image Source: Google)
இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
\தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12இல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
இத்தொடருக்கான இந்திய அணியும் கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்ஸர் பட்டேலுக்கு மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்துள்ளார்.