
ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 248 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இத்ல் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் அதிரடியாக குவித்தது. பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 131 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்து 214 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைய காரணமாக இருந்த இஃப்திகார் அகமது 71 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 101 ரன்கள் குவித்தார்.
பெரிய இலக்கை நோக்கி விளையாடிய அனுபவம் இல்லாத நேபாள் அணி 23.4 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களுக்கு சுருண்டது. ஆனாலும் கூட அந்த அணிக்கு இது ஒரு நல்ல அனுபவ பாடமாக அமைந்திருக்கும். பெரிய அணிகளுக்கு எதிராக இப்படியான போட்டிகள் சிறிய அணிகளுக்கு கிடைக்காது.