
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது.
புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 26 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 3 விக்கெட்டும் , அர்ஷ்தீப் சிங்குக்கு 2 விக்கெட்டும் , அவேஷ் கானுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் ஆடிய இந்திய அணி 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் வெற்றி இலக்கை எடுத்தது. 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 பந்தில் 33 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிக்சர் அடித்து ஹர்திக் பாண்ட்யா அணியை வெற்றி பெற வைத்தார்.