
Babar Azam Named Captain Of ICC Men's T20I Team Of 2021, No Indians In XI (Image Source: Google)
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 அணியின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், 11 பேர் கொண்ட ஆடவர் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அந்த அணியில் இருந்து பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகீன் அஃப்ரிடி ஆகிய 3 வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் ரிஸ்வான் 1326 ரன்களும், பாபர் அசாம் 939 ரன்களும் சேர்த்துள்ளனர். தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ், ஐசிசி அணியின் ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.