
Babar Azam Tops T20I Rankings With The Bat, Wanindu Hasaranga With The Ball (Image Source: Google)
நமிபியா(70), ஆப்கானிஸ்தான்(51) ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து அரைசதங்களை அடித்ததையடுத்து, முதலிடத்திலிருந்த டேவிட் மலானை கீழே இறக்கி முதலிடத்தில் பாபர் ஆசாம் 834 புள்ளிகளுடன் அமர்ந்துள்ளார். இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 798 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
கடைசியாக பாபர் ஆசாம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி டி20 வரிசையில் முதலிடத்தில் இருந்தபின் 2 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையிலும் பாபர் ஆஸம்தான் முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்திலிருந்த டேவிட் மலான் ஓர் ஆண்டுக்குப்பின் கீழே இறங்கியுள்ளார்.