Advertisement

ஐசிசி தவரிசையில் முதலிடத்தை பிடிக்குமா பாகிஸ்தான் அணி?

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் ஐசிசியின் ஒருநாள் அணிகள் தரவரிசைப் பட்டியளில் முதலிடத்தை பிடிக்கும்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 26, 2023 • 15:33 PM
ஐசிசி தவரிசையில் முதலிடத்தை பிடிக்குமா பாகிஸ்தான் அணி?
ஐசிசி தவரிசையில் முதலிடத்தை பிடிக்குமா பாகிஸ்தான் அணி? (Image Source: Google)
Advertisement

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இப்போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது போட்டி நேற்று முந்தினம் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

Trending


இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறும்.

தற்போது முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி 2ஆவது இடத்திற்கு தள்ளப்படும். இந்த வருடம் இதுவரை 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி அதில் 7இல் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement